சிவகிரியில் திமுக உறுப்பினர் சேர்க்கை

சிவகிரி, நவ. 27: வாசுதேவநல்லூர் ஒன்றிய திமுக சார்பில் சிவகிரி பேரூர்பகுதியில் எல்லோரும் நம்முடன் திமுக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடந்தது. ஒன்றிய செயலாளர் பொன். முத்தையா பாண்டியன் தலைமை வகித்தார். சிவகிரி பேரூர் செயலாளர் டாக்டர் செண்பகவிநாயகம், மாவட்ட வக்கீல் அணி துணை அமைப்பாளர் பொன்ராஜ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்டவர்கள் திமுகவில் உறுப்பினராகச் சேர்ந்தனர். இதில் மாவட்ட துணை செயலாளர் மாடசாமி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மனோகரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணக்குமார், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட துணை செயலாளர் புல்லட் கணேசன், சிவகிரி பேரூர் இளைஞரணி அமைப்பாளர் கந்தவேல், வார்டு செயலாளர்கள்  பரமசிவன், ராம்குமார், இளையராஜா மற்றும் பலர் பங்கேற்றனர்.

Related Stories:

>