ராஜபாளையத்தில் ஆரா மருத்துவமனை திறப்பு விழா

ராஜபாளையம், நவ. 27: ராஜபாளையத்தில் ஆரா சிறப்பு மருத்துவமனை மற்றும் எஸ்எஸ்எஸ் டயக்னோஸ்டிக்ஸ் திறப்பு விழா நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் கண்ணன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். தென்காசி எம்பி தனுஷ்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மதுரை அப்பல்லோ மருத்துவமனை இருதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் கருப்பையா கலந்து கொண்டு 32 சிலைஸ் சிடி ஸ்கேட், டிஜிட்டல் எக்ஸ்ரே, ரத்த பரிசோதனை லேப் ஆகிய வசதிகளை திறந்து வைத்தனர். இம்மருத்துவமனை 24 மணிநேரமும் மருத்துவ பணி செய்வுள்ளது. முன்னதாக டாக்டர்கள் ராதா, அனந்தகிருஷ்ணன் வரவேற்க, நிறைவாக நிர்வாகிகள் சூரிய நாராயணன், கிருஷ்ணன் நன்றி கூறினர்.

Related Stories: