×

அருப்புக்கோட்டையில் ஆர்எம்ஜெ மஹால் திறப்பு விழா

அருப்புக்கோட்டை, நவ. 27: அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் எதிரே பூ மார்கெட் அருகில் ஆர்.எம்.ஜெ மஹால் திறப்பு விழா நேற்று நடந்தது. உரிமையாளர் முனிஜெயராம் விழாவிற்கு வந்த அனைவரையும் வரவேற்றார். அவரது மனைவி ரேவதி முனிஜெயராம் குத்துவிளக்கேற்றினார்.அவரது குழந்தைகள் ரிஷிவந்த், ஹர்ஷவதனா விருந்தினர்களை உபசரித்தனர். மகால் திறப்பு விழாவில் சாத்தூர் ராமச்சந்திரன் எம்எல்ஏ, முன்னாள் ஒன்றிய சேர்மன் சுப்பாராஜ், முன்னாள் நகர் மன்ற தலைவர் சிவப்பிரகாசம், நகர திமுக செயலாளர் மணி, முன்னாள் நகர் மன்ற துணைத்தலைவர் பழனிச்சாமி மற்றும் அரசு அலுவலர்கள், காவல்துறை அதிகாரிகள், வணிகர்கள், உறவினர்கள் பலர் கலந்துகொண்டனர். நகரில் புதிய பேருந்து நிலையம் எதிரில் 3500 சதுரஅடியில் மிகப்பிரமாண்டமாய் அமைந்துள்ள இந்த கட்டிடம் குறைந்த வாடகையில் சகல வசதிகளுடன் தனித்தனியே மணமகன், மணமகள் அறை என உள்ளது.மேலும் ஆர்.எம்.ஜெ.டவர் புதிய வணிக வளாக கட்டிடமும் உள்ளது. இதிலும் வாடகைக்கு கடைகள் உள்ளன. வணிக பெருமக்கள் தொடர்புகொண்டு பயன்பெறலாம். மஹால், வணிக வளாக தொடர்புக்கு 96008- 26315,97893-05493 என்ற எண்ணில் விபரங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம் என நிர்வாகி முனிஜெயராம் தெரிவித்துள்ளார்.

Tags : RMJ Mahal Opening Ceremony ,Aruppukottai ,
× RELATED மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா அருப்புக்கோட்டையில் இன்று அன்னதானம்