×

ராபி பருவ பயிர்களான வாழை, வெங்காயம், மிளகாய், மல்லிக்கு காப்பீடு விவசாயிகளுக்கு அழைப்பு

விருதுநகர், நவ. 27: விருதுநகர் மாவட்டத்தில் ராபி பருவ தோட்டக்கலை பயிர்களான வாழை, வெங்காயம், மிளகாய், கொத்தமல்லிக்கு பயிர் காப்பீடு செய்ய விவசாயிகள் கடன்பெறும் வங்கிகளில் கட்டாய காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யப்படுவர்.கடன் பெறா விவசாயிகள் பொதுசேவை மையங்கள், வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், காப்பீட்டு நிறுவனம் அங்கீகரித்த முகவர்கள் மூலம் செய்யலாம்.காப்பீடு கட்டணமாக வாழை ரூ.3,115, வெங்காயம் ரூ.1,552, மிளகாய் ரூ.1,222, கொத்தமல்லி ரூ.585 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கொத்தமல்லி பயிருக்கு பதிவு செய்ய கடைசி நாள் டிச.15, வாழை, மிளகாய் பயிர்களுக்கு கடைசி நாள் டிச.31, வெங்காய பயிருக்கு கடைசி நாள் ஜன.18.

விவசாயிகள் கடைசி நேர தாமதத்தை தவிர்க்க உடனடியாக பயிர்காப்பீடு செய்யலாம். காப்பீடு பதிவின் போது முன்மொழி விண்ணப்பம், பதிவு விண்ணப்பம், விஏஓ வழங்கும் அடங்கல், விதைப்பு அறிக்கை, வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் இணைத்து கட்டண தொகை செலுத்தி ரசீது பெற்று கொள்ளலாம் என வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : insurance farmers ,
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...