சரக்கு ஆட்டோ கவிழ்ந்து பெண் பலி

ஆவடி: ஆவடியை அடுத்த வெள்ளானூர் கிராமத்திலிருந்து மிட்டனமல்லிக்கு கடந்த 22ம் தேதி துக்க நிகழ்ச்சிக்கு ஒரு சரக்கு ஆட்டோவில் 22 பெண்கள் சென்றனர். ஆட்டோவை அதே பகுதியை சேர்ந்த சிவா (24) என்பவர் ஓட்டி சென்றார்.  ஆட்டோ, ஆவடி- வீராபுரம் நெடுஞ்சாலை, வெள்ளானூர் பள்ளிக்கூடம் அருகே சென்றபோது,  நிலைதடுமாறி ஆட்டோ கவிழ்ந்தது. இதில், ஆட்டோவுக்கு அடியில் சிக்கி வெள்ளானூர், 2வது தெருவைச் சேர்ந்த சுகந்தி (55) இறந்தார். இதில் காயமடைந்தவர்கள் சென்னை ராஜீவ்காந்தி, கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories:

>