வீரமச்சான்பட்டியில் நாளை ஆண்களுக்கு கு.க. சிகிச்சை ஏற்பாடு

திருச்சி, நவ.27: திருச்சி வீரமச்சான்பட்டி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம் 28ம் தேதி (நாளை) நடைபெறவுள்ளது. திருச்சி அருகே வீரமச்சான்பட்டி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் பங்கு பெறும் ஆண்களுக்கு அரசின் ஈட்டுத்தொகை ரூ.1,100 வழங்கப்படும். ஓரிரு நிமிடங்களில் மயக்க மருந்து கொடுக்கப்படாமல் அறுவை சிகிச்சை செய்யப்படும். அறுவை சிகிச்சைக்கு பின்பு மருத்துவமனையில் தங்கவேண்டியதில்லை. சிகிச்சை முடிந்த பிறகு வீட்டிற்கு செல்லலாம். கத்தியின்றி, ரத்த சேதமின்றி, தையல், தழும்புமின்றி செய்யப்படும் இந்த அறுவை சிகிச்சையால் பின் விளைவுகள் ஏதும் இருக்காது. எனவே, விருப்பமுள்ள ஆண்கள் இந்த அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம் என கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Related Stories: