×

வர்த்தக நிறுவனங்கள், பஸ்கள் வழக்கம்போல் இயங்கின தென்னைமரங்களை காப்பீடு செய்து கொள்ளலாம்

திருத்துறைப்பூண்டி, நவ.27: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை வேளாண்மை உதவி இயக்குநர் முனைவர் பார்த்தசாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நல்ல காய்ப்புள்ள தென்னைமரங்களில் உள்ள முதிர்ந்த இளநீர் காய்களை காற்று வீச தொடங்குவதற்குள் அறுவடை செய்ய வேண்டும், தென்னைமரங்களில் தலைப்பில் உள்ள மட்டைகளை வெட்டிவிட வேண்டும், இவ்வாறு செய்வதால் தென்னை மரங்களின் தலைப்பில் காற்று எளிதாக செல்வதால் தென்னைமரங்கள் சாயாமல் பாதுகாக்க முடியும், தென்னைமரங்களின் அடிபாகத்தில் மண் அணைப்பு செய்தால் கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும். உடனடியாக தென்னைமரங்களுக்கு உரமிடுதல், நீர் பாய்ச்சுவதை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும். இதனால் மரங்களின் வேர்பகுதி இறுகி பாதிக்கப்படாமல் காற்றின் வேகத்தை தாங்கி நிற்கும். இதை மீறி தென்னைமரங்கள் பாதிக்கப்படலாம் என்பதால் விவசாயிகள் தங்கள் தென்னைமரங்களை காப்பீடு செய்துகொள்ளலாம்.

எப்படி காப்பீடு செய்வது: குட்டை மற்றும் ஒட்டுரகங்களை 4ம் ஆண்டு முதலும், நெட்டை ரகங்களை 7ம் ஆண்டு முதல் 60ம் ஆண்டு வரை காப்பீடு செய்யலாம், ஆண்டுக்கு 30 காய்களுக்கு மேல் தரக்கூடிய மரங்களை இத்திட்டத்தில் சேர்க்கலாம், ஒரு ஏக்கருக்கு சுமார் 175 தென்னை மரங்களை மட்டுமே காப்பீடு செய்ய முடியும், 4 அல்லது 7 வயது முதல் 15 வயதுள்ள ஒரு மரத்துக்கு ரூ.2.25.ம், 16 முதல் 60வயதுடைய மரம் ஒன்றுக்கு ரூ 3.50ம் காப்பீட்டு தொகையாக செலுத்த வேண்டும், காப்பீட்டு தொகையை வரை வோலையாக அக்ரிகல்சர் இன்ஸ்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் சென்னை என்ற பெயரில் எடுக்க வேண்டும். 4 அல்லது 7 வயது முதல் 15 வயது மரம் ஒன்றுக்கு ரூ.900, 15 - வயது முதல் 60 வயது வரை உள்ள மரங்களுக்கு ரூ. 1,750 கட்டணம் ஆகும். காப்பீடு செய்வதற்கு முன் மொழிப்படிவத்துடன் ஆதார் அட்டை நகல், சிட்டா மற்றும் அடங்கல் புல எண்வரைபடம், விவசாயின் புகைப் படம், வட்டார வேளாண்மை உதவி இயக்குநரின் காப்பீட்டுத் திட்டத்திற்கான சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகம் முதல் பக்க நகல், காப்பீடு கட்டணத்திற்கான வரைவோலையுடன் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Businesses ,
× RELATED சிறு வணிகர்களுக்கான வணிக வரி சமாதான...