×

வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொது செயலாளர் பேச்சு

கும்பகோணம், நவ. 27: கும்பகோணம் அடுத்த ஆடுதுறையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் முகமது சுல்தான் தலைமையில் நடந்தது. மாநில முதன்மை தலைவர் அப்துல் ரகுமான், மாநில பொருளாளர் ஷாஜகான், மாநில துணைத்தலைவர் நவாஸ்கனி, மாநில செயலாளர்கள் ஆடுதுறை ஷாஜகான், முகமது இஸ்மாயில், ஜமால் முகமது, இப்ராகிம் முன்னிலை வகித்தனர். மாநில பொது செயலாளர் முகமது அபுபக்கர் பேசுகையில், மத்தியில் பாஜக பொறுப்பேற்ற நாள் முதல் மக்களுக்கு விரோதமான பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மத்தியில் பாஜகவை கண்மூடித்தனமாக ஆதரித்து தமிழகத்துக்கு உரிமைகள் மட்டும் இல்லாமல் சிறுபான்மைக்கு சமுதாயத்துக்கு துரோகம் விளைவிக்கக்கூடிய அதிமுக அரசுக்கு தகுந்த பாடம் கற்பிக்கும் வகையில் வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிக்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பாடுபடும். வரும் சட்டமன்ற தேர்தலில் மதசார்பற்ற திமுக கூட்டணி வெல்லும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்பார் என்றார்.

Tags : Secretary General ,Union ,Indian Union Muslim League ,elections ,Assembly ,DMK ,
× RELATED அவதூறு பேசி ஆட்சிக்கு வர முயற்சி...