×

கறம்பக்குடி வட்டார வேளாண் தொழில்நுட்ப ஆலோசனை கூட்டம்

கறம்பக்குடி நவ.27: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டார துணை உதவி இயக்குநர் அலுவலகத்தின் மூலம் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மற்றும் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் 2020-21ம் ஆண்டிற்கான வட்டார அளவிலான கறம்பக்குடி விவசாயிகளின் ஆலோசனை குழு கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார தொழில்நுட்ப குழு அமைப்பாளர் லூர்து ராயப்பன் தலைமை வகித்து தொடங்கி வைத்து நடப்பு ஆண்டில் வோளண்மை துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து கூறினார். கறம்பக்குடி அட்மா குழு தலைவர் பச்சைக்குட்டி சிறப்புரை ஆற்றினார்.. வட்டார வேளாண் அலுவலர் சந்தானம், துணை வேளாண் அலுவலர் மகாலிங்கம், வட்டார தொழில்நுட்ப மேலாளர் சகுபர் அலி ேபசினர்.கூட்டத்தில் வட்டார அட்மா கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Karambakudy Regional Agricultural Technical Advisory Meeting ,
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு