×

காரைக்காலில் நிவர் புயலில் சேதமான வயல்களில் அரசு வேளாண் கல்லூரி மாணவர்கள் சேவை பணி


காரைக்கால், நவ.27: காரைக்கால் பஜன்கோவா அரசு வேளாண் கல்லூரி மாணவர்கள், நிவர் புயலில் உருக்குலைந்த வயல்களில் சிறப்பு சேவை முகாமை நடத்தினர். காரைக்கால் பஜன்கோவா அரசு வேளாண் கல்லூரியில், இளங்கலை இறுதிஆண்டு பயிலும் 20 மாணவிகளும், 3 மாணவர்களும் கிராமத் திட்டம் என்னும் நேரடி களப் பயிற்சியினை, கொரோனா காலத்தை முன்னிட்டு, தாங்கள் வசிக்கும் கிராமங்களில் மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரியின் இணைப்பேராசிரியர் டாக்டர் ஆனந்தகுமார் அந்தப்பாடத் திட்டத்தைத் தலைமை தாங்கி இணையவழி மூலம் மாணவ, மாணவியரை வழிநடத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, கடந்த 25 மற்றும் 26ம் தேதி, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழக பகுதி விவசாயிகளின் வயல்களில் நேரடியாக களம் இறங்கி, நிவர் புயல் கனமழை காரணமாக, தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றுதல், பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் பற்றி எடுத்துரைத்தல், மழைக்குபின், உரம் மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்து விளக்குதல், வயல் மற்றும் வரப்புகளை சீரமைத்தல், சாய்ந்த வாழை மற்றும் மரங்களுக்கு முட்டு கொடுத்து சரி செய்தல், மண் அமைத்து கொடுத்தல், ஆடு, மாடுகளை பாதுகாக்க கொட்டகை அமைக்க உதவுதல், விழுந்த தேங்காய், வாழைக்காய்களை சந்தைப்படுத்துதலுக்கு உதவுதல் போன்ற சேவைப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணியில், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழக மாணவிகள் மற்றும் மாணவர்கள் களப்பணியாற்றினார்கள். மாணவ, மாணவிகளின் பணிகளுக்கு விவசாயிகள் கணேஷ், கருணாகரன், சாமிநாதன், பிரபாகரன் உள்ளிட்ட பலர் நன்றி தெரிவித்தனர்.

Tags : Government ,College students ,storm ,Karaikal ,Nivar ,
× RELATED ஒரே பைக்கில் சென்றபோது அடையாளம்...