×

வேதாரண்யத்தில் கால்நடை சிகிச்சை முகாம்


வேதாரண்யம், நவ.27: வேதாரண்யத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நேற்று வேதாரண்யம் தாலுகா பஞ்சநதிக்குளம் மேற்கில் வெள்ள பாதிப்பிலிருந்து கால்நடைகளை மீட்க கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம் நடைபெற்றது. முகாமினை பஞ்சநதிகுளம் மேற்கு ஊராட்சி மன்றத் தலைவர் மணிமேகலை சிவகுரு பாண்டியன் துவக்கி வைத்தார். முகாமில் மண்டல இணை இயக்குனர் சுமதி, நாகப்பட்டினம் கோட்ட உதவி இயக்குனர் சொக்கலிங்கம், கால்நடை மருத்துவர்கள் வெற்றிவேல், சுதாகர், மீனாட்சி சுந்தரம் , ராதா, கமலபட்டு, கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் 60 பசுமாடுகளுக்கும், 40 வெள்ளாடுகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் செயற்கை முறை கருவூட்டல் பணியும் குடற்புழு நீக்கம், தாது உப்புக் கலவையும் வழங்கப்பட்டது. ஊராட்சி வார்டு உறுப்பினர் கணேசன் நன்றி கூறினார்.

Tags : treatment camp ,Vedaranyam ,
× RELATED வேதாரண்யம் அருகே குடிதண்ணீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் மறியல்