×

உழவர் உற்பத்தியாளர் குழு துவக்கம்

தர்மபுரி, நவ.27: நல்லம்பள்ளி ஒன்றியம், பாலவாடி அருகே எம்ஜிஆர் நகரில் உழவர் உற்பத்தியாளர் குழு நேற்று துவக்க விழா நடந்தது. வேளாண்மை பொறியியல் துறை உதவிப் பொறியாளர் அறிவழகன் துவக்கி வைத்தார். இதுபற்றி தலைவர் அருள்மூர்த்தி, இயக்குனர் ரவி ஆகியோர் கூறியதாவது: இண்டூர் சுற்றுவட்டார பகுதியில் மானாவாரியாக கடலை, திணை, சாமை ஆகியவை விளைவிக்கப்படுகிறது. கடலை மற்றும் சிறுதானியங்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்தால், விவசாயிகளுக்கு உரிய லாபம் கிடைக்கும் என்பதற்காக 100 விவசாயிகள் சார்பில் உழவர் உற்பத்தியாளர் குழு துவங்கப்பட்டுள்ளது. இதற்கு அரசின் 90 சதவீத மானியத்தில் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மையத்தால் பேடரஅள்ளி, பாலவாடி, தளவாய் அள்ளி, சோமனஅள்ளி, பொம்ம சமுத்திரம், இண்டூர், அதகபாடி, பள்ளிப்பட்டி, கருபையனஅள்ளி, வேலம்பட்டி, ஓஜிஅள்ளி, தித்தியோப்பனஅள்ளி ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயனடைவார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Farmer Producer Group Initiative ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா