×

பொதுவேலைநிறுத்தம் மாவட்டம் முழுவதும் மறியல் போராட்டம்

திருப்பூர், நவ 27: திருப்பூரில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக நடந்த பொது வேலை நிறுத்த சாலை மறியலில் ஈடுபட்ட எம்.பி உட்பட 1531 பேரை போலீசார் கைது செய்தனர். மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், நபருக்கு மாதம் ஒரு முறை 10 கிலோ அரிசி 10 கிலோ கோதுமை வழங்க வேண்டும். வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு மாதம் ரூ. 7500 நிவாரண தொகை வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., தொ.மு.ச.,  ஐ.என்.டி.யு.சி., ஹெச்.எம்.எஸ், எம்.எல்.எப் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தப்போராட்டத்தை அறிவித்திருந்தனர். அதன் ஒரு பகுதியாக திருப்பூரில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தினர் திருப்பூர் மாநகரப் பகுதியான அனுப்பர்பாளையம், புதிய பஸ் நிலையம் தலைமை தபால் நிலையம், திருமுருகன் பூண்டி, சிடிசி கார்னர். புதூர் பிரிவு, கலெக்டர் அலுவலகம், தாடிக்கார முக்கு போன்ற இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்தில் திருப்பூர் எம்.பி. சுப்பராயன், சி.ஐ.டி.யு. பனியன் சங்க செயலாளர் சம்பத், ஏ.ஐ.டி.யு.சி. பொதுச்செயலாளர் சேகர், தி.மு.க. தெற்கு தொகுதி பொருப்பாளர் டி.கே.டி. நாகராசன், எம்.எல்.எப். பனியன் சங்க செயலாளர் மனோகரன், காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணன், ஐ.என்.டி.யு.சி. சிவசாமி, உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சாலை மறியலில் ஈடுபட்டதாக மாநகர பகுதியில் 712 பேரை போலீசார் கைது செய்தனர்.மத்திய அரசை கண்டித்து பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் திருப்பூர் தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று மறியல் போராட்டம் நடைபெற்றது.

அவிநாசி:சிஐடியு, ஏஐடியுசி, எல்பி எஃப், ஐஎன்டியூசி, எம் எல்எப்.தொழிற்சங்கத்தினர், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் அவிநாசி, சேவூர், திருமுருகன்பூண்டி  உள்ளிட்ட பகுதிகளில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் முத்துச்சாமி, சிஐடியு மாவட்ட நிர்வாகி ஈஸ்வரமூர்த்தி, விவசாய சங்க மாவட்ட நிர்வாகி. வெங்கடாசலம், ஏஐடியூசி. இசாக்,  எம்.எல்.எப். பெருமாள், ஐஎன்டியூசி.. நவநீத கண்ணன் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர் சங்க முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இதுபோல அவிநாசி தாலூகா அலுவலகம் முன்பு அரசு அனைத்து துறை ஊழியர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்துக்கு, வட்டக்கிளை தலைவர் வி.சுமதி தலைமை தாங்கினார். வட்டக்கிளைசெயலாளர் கருப்பன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். முன்னாள் மாவட்டத்தலைவர் ஜி,சுமதி,சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய தலைவர் விஜயலட்சுமி, வட்டக்கிளை பொருளாளர் மீனாகுமாரி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

உடுமலை: உடுமலையில் நடந்த மறியல் போராட்டத்துக்க எல்பிஎப் இளங்கோவன் தலைமை வகித்தார். ஏஐடியுசி மாநில குழு உறுப்பினர் சவுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார். இதில் எல்பிஎப் நாகமாணிக்கம், எம்எல்எப் ஈஸ்வரன், ஐஎன்டியுசி பாலன், கணேசன், சிஐடியு கனகராஜ், விஸ்வநாதன், ஜெகதீசன், ஏஐடியுசி ரணதேவ், பாலசுப்பிரமணியம், ஒன்றிய கவுன்சிலர் குருவம்மாள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தொமுச சிடிசி மணி, ஜெயராஜ், சுரேஷ், சோமு உட்பட பலர் பங்கேற்றனர்.
உடுமலை தாலுகா எரிசனம்பட்டி கிராமத்தில் நடந்த மறியலில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினரும், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினரும் பங்கேற்றனர். விவசாயிகள் சங்க மாநில துணை செயலாளர் மதுசூதனன் தலைமையில், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பஞ்சலிங்கம்  உட்பட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். காங்கயம்:காங்கயம் பஸ்நிலைய வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் நடராஜ் தலைமை வகித்தார். இந்திய தொழிற்சங்க பேரவையின் காங்கயம் ஒன்றிய செயலர் பொன்னுசாமி, தொழிலாளர் முன்னேற்றப் பேரவையின் திருப்பூர் மாவட்டத் தலைவர் பி.சென்னியப்பன், சித்ரா உள்பட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மாவட்டம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட 1531 பேரை போலீசார் கைது செய்தனர்.


Tags : protest ,district ,
× RELATED தபால் வாக்கு செலுத்த ஏதுவாக போலீசாருக்கு சிறப்பு வாக்கு சாவடி மையம்