கொரோனா பாதிப்பால் ஹெத்தையம்மன் பண்டிகையை எளிமையாக கொண்டாட முடிவு

ஊட்டி,நவ.27: நீலகிரி மாவட்டத்தில் ஹெத்தையம்மன் பண்டிகையை எளிமையாக கொண்டாட முடிவு செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இன மக்களின் குல தெய்வமான ஹெத்தையம்மன் கோயில் திருவிழா ஆண்டு தோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். கொரோனா பாதிப்பு காரணமாக இம்முறை மிகவும் எளிமையாக இவ்விழாவை கொண்டாட அனைத்து கிராமங்களிலும் முடிவு செய்துள்ளனர். ஊட்டி அருகேயுள்ள ேபரரார் பகுதியில் ஹெத்தையம்மன் பண்டிகைக்காக விரதம் எடுக்கும் நிகழ்ச்சி துவங்கியது. இங்கிருந்து பக்தர்கள் கொதுமுடி கோயிலுக்கு பாத யாத்திரையாக சென்றனர். வரும் 29ம் தேதி சக்கலாத்தி பண்டிகையை முன்னிட்டு ஹெத்தையம்மன் செங்கோல் பக்தர்கள் விரதம் மேற்கொள்ளும் நிலையில், இம்முறை ஒத்திகை நிகழ்ச்சியில் கோயில் பூசாரிகள் மட்டுமே பங்கேற்க முடிவு செய்துள்ளனர். அதேசமயம், வழக்கம் நடக்கும் அருள்வாக்கு அளிக்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. ஆனால், இதிலும், பக்தர்கள் பங்கேற்க மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கம் போல் நடக்கும் அன்னதான நிகழ்ச்சிகள் இம்முறை தவிர்க்கப்பட்டுள்ளது. ஜனவரி முதல் வாரத்தில் முக்கிய திருவிழாவையும், மிக எளிமையாக கொண்டாட படுகர் சமுதாய மக்கள் முடிவு செய்துள்ளனர்.

Related Stories:

>