×

கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, நவ. 27: அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தையொட்டி ஈரோட்டில் நேற்று மத்திய, மாநில தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். கொரோனா நிவாரண நிதியாக தொழிலாளர்கள் அனைவருக்கும் மாதம் ரூ.7500 வழங்க வேண்டும். வேளாண் சட்டத்தையும், தொழிலாளர் விரோத சட்டத்தையும் கைவிட வேண்டும். ஊரக வேலைவாய்ப்பு திட்டம்போல நகர்புற வேலைவாய்ப்பு உருவாக்கி 200 நாட்களுக்கு வேலை கொடுக்க வேண்டும். நலவாரிய பயன்களை பதிவு செய்த அனைவருக்கும் வழங்க வேண்டும். ஆன்லைன் குளறுபடி பதிவை எளிமையாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று அகில இந்திய அளவிலான பொது வேலை நிறுத்தம், மறியல் உள்ளிட்ட போராட்டங்களுக்கு மத்திய, மாநில தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தனர். இதனையொட்டி ஈரோட்டில் அனைத்து மத்திய, மாநில தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வீரப்பன்சத்திரம் பஸ் ஸ்டாப்பில் நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சுப்ரமணி தலைமை தாங்கினார். எல்.பி.எப். கோபால், ஏ.ஐ.டி.யு.சி. செல்வம், எல்.டி.யு.சி. கோவிந்தராஜ், எஸ்.டீ.டி.யு. அப்துல்ரகுமான், எம்.எல்.எப். எபிநேசர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

பவானி: தொழிலாளர் நலனுக்கு எதிரான மத்திய அரசையும், தமிழக அரசையும் கண்டித்து பவானியில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் அந்தியூர் மேட்டூர் பிரிவில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் மாதேஸ்வரன் தலைமை தாங்கினார். தி.மு.க. நகர செயலாளர் நாகராசன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் சிவராமன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சித்தையன். வட்டார தலைவர் சந்திரசேகரன். சி.ஐ.டியு. பவானி தாலுகா செயலாளர் ஜெகநாதன், தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் பவானி தாலுகா செயலாளர் மாணிக்கம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். போக்குவரத்து கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் தங்கராஜ், இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் வினிஷா, எல்டியுசி மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட 125 பேர் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.அந்தியூர்: அந்தியூர் பஸ் நிலையம் முன்பு நேற்று அனைத்து தொழிற்சங்கத்தினர் சார்பில் மறியல் போராட்டம் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க தாலுகா தலைவர் குருசாமி தலைமையில் ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ. மற்றும் அனைத்து தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள், விவசாயத் தொழிலாளர் சங்கங்கள் சார்பாக, பொது வேலை நிறுத்தம் மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்டதாக 20 பெண்கள் உட்பட 60 ேபரை போலீசார் கைது செய்தனர்.மாவட்டம் முழுவதும் ேபாராட்டத்தில் ஈடுபட்ட 426பேரை ேபாலீசார் கைது செய்தனர்.

Tags : unions ,
× RELATED தமிழ்நாட்டின் அனைத்து...