×

பொருளாதார சுதந்திரம் இருந்தால் பெண்களின் உரிமைகளை பறிக்க முடியாது கனிமொழி எம்பி பேச்சு

கருங்கல், நவ.27: குமரி மேற்கு மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில், மகளிர் வன்கொடுமைகளுக்கு எதிராக கண்டனக் கூட்டம் நடந்தது. கருங்கல் சி.எஸ்.ஐ.மண்டபத்தில் நடந்த கூட்டத்துக்கு மகளிர் அணி அமைப்பாளர் முனைவர் கிளாடிஸ் லில்லி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மனோதங்கராஜ் எம்எல்ஏ, முன்னாள் எம்பி ஹெலன் டேவிட்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தை மாநில மகளிர் அணி செயலாளர் கவிஞர் கனிமொழி எம்பி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியது: சமூகத்தில் ஆணுக்கு நிகராக பெண்கள் மதிக்கப்படுவது இல்லை. பெண்களுக்கான வாய்ப்பை கேட்டால் வன்முறை நடக்கிறது. பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை வெளிக்கொண்டு வர வேண்டும் என்ற விழிப்புணர்வே இல்லை.

பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் இருந்தாலே போதும். அவர்களது உரிமைகளை பறிக்க முடியாது. அதற்கு கல்வி அவசியம் ஆகும். இதை உணர்ந்தே கலைஞர் படித்த பெண்களுக்கு திருமண உதவி திட்டம், சொத்தில் சம பங்கு, சுய உதவி குழு போன்றவற்றை கொண்டு வந்தார் என்றார்.கூட்டத்தில் டாக்டர் மேரி ஹெலன் கருத்துரை வழங்கினார். மாவட்ட அவைத்தலைவர் பப்புஷன், ஒன்றிய செயலாளர்கள் டிபி ராஜன், சிற்றார் ரவிசந்திரன், நகர செயலாளர் பொன் ஆசைதம்பி, மாவட்ட துணை செயலாளர் டாக்டர் புஷ்பலீலா ஆல்பன், மாவட்ட மகளிரணி துணைத் தலைவர் கோமதி மணி, நகர அமைப்பாளர்கள் மும்தாஜ், தொண்டரணி அமைப்பாளர் எப்சிராணி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED விருதுநகரில் சதம் அடித்து விளையாடும்...