மெழுகுவர்த்திக்கு தட்டுப்பாடு புயல் முன்னெச்சரிக்கை பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் தவிப்பு வாடகை வாகனங்களில் சொந்த ஊர் சென்றனர்

திருவாரூர், நவ.25: திருவாரூர் மாவட்டத்தில் நேற்று மதியம் முதல் அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டதன் காரணமாக பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். நிவர் புயல் எச்சரிக்கை காரணமாக திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து என்பது நேற்று மதியம் ஒரு மணியுடன் நிறுத்தப்படுவதாக அரசு சார்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வரும் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி மற்றும் நன்னிலம் ஆகிய 4 அரசு போக்குவரத்து கழக பணிமனையை சேர்ந்த 252 பேருந்துகளில் நேற்று மதியம் ஒரு மணி அளவில் 80 சதவீத பேருந்துகள் நிறுத்தப்பட்டன. அதன் பின்னர் படிப்படியாக மாலை 3 மணிக்குள் அனைத்து பேருந்துகளும் பணிமனைக்கு எடுத்துச் சென்று நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி மற்றும் நன்னிலம் பேருந்து நிலையங்களில் பொதுமக்கள் பேருந்திற்காக நீண்டநேரம் காத்திருந்த நிலையில் அரசு தெரிவித்தவாறு சரியான நேரத்தில் பேருந்துகளை நிறுத்தியதால் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்த பொதுமக்கள் அதன்பின்னர் வாடகை வாகனங்கள் மூலம் அவசர அவசரமாக தங்களது வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

Related Stories: