நாைக அருகே மூதாட்டியிடம் 9 பவுன் நகை பறிப்பு

நாகை, நவ.25: நாகை அருகே மூதாட்டியிடம் 9 பவுன் செயினை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நாகூரை அடுத்த தெத்தி திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர். கருப்பையன் இவரது மனைவி குருவேலு (63). இவர் நேற்று முன்தினம் வீட்டில் எதிரே உள்ள வாய்காலில் குப்பையை கொட்டி விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் குருவேலுவின் கழுத்தில் இருந்த 9 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பினர். இது குறித்து நாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: