டெங்கு விழிப்புணர்வு முகாம்

காரியாபட்டி, நவ.25: காரியாபட்டி செவல்பட்டி காலனியில் டெங்கு தடுப்பு  விழிப்புணர்வு முகாம்  நடைபெற்றது. காரியாபட்டி  இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமை வகித்தார். எஸ்.பி.எம். டிரஸ்ட் நிறுவனர் அழகர்சாமி முன்னிலை வைத்தார். காரியாபட்டி அரசு மருத்துவமனை சுகாதார ஆய்வாளர் கருப்பையா வரவேற்றார். முகாமில் டெங்கு தடுப்பு குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். துண்டுப் பிரசுரங்கள் மற்றும் கையேடுகள் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. முகாமில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>