×

மக்காச்சோளப் பயிரில் படைப்புழுவை கட்டுப்படுத்த அதிகாரிகள் ஆலோசனை

திருவில்லிபுத்தூர், நவ. 25: திருவில்லிபுத்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் முத்துலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கை: திருவில்லிபுத்தூர் வட்டாரத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பயிரின் வளர்ச்சிப் பருவத்தில் குருத்தில் நுழைந்தும் மேலும், கதிர் உருவாகும்போது, அதில் உள்நுழைந்தும் படைப்புழு சேதம் ஏற்படுத்துகிறது. ரசாயன பூச்சிக்கொல்லிகளை தெளிப்பதால் மட்டுமே படைப்புழுக்களை கட்டுப்படுத்த இயலாது. அசாடிராக்டின் ஒரு சதவீதம் தாவர பூச்சிக்கொல்லி மருந்தினை பயிர் வளர்ச்சிப்பருவத்தில், அதாவது விதைத்த 20வது நாள் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி என்ற விகிதத்தில் தெளிப்பதன் மூலம், பூச்சித் தாக்குதல் மற்றும் இனப்பெருக்க திணை கட்டுப்படுத்திவிடலாம்.
வயலைச் சுற்றி இனக்கவர்ச்சி பொறி ஏக்கருக்கு 6 முதல் 10 எண்ணம் அமைப்பதன் மூலம், ஆண் அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கலாம்.

விளக்குப் பொறியினை வயலில் வைப்பதன் மூலம் தாய் அந்துப்பூச்சி நடமாட்டத்தை கண்காணித்து, அதன்மூலம் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். இந்தப் படைப்புழுவானது பகல்வேளையில் சூரிய வெளிச்சத்தில் வெளியே வராமல் மண்ணிற்குள்ளோ அல்லது பயிரின் குருத்து மற்றும் கதிர்பகுதியில் மறைந்திருந்து, பின்னர் இரவு வேளையில் வெளியில் வந்து பயிருக்கு சேதம் விளைவிக்கும். எனவே, மாலை வேளையில் மருந்து தெளிக்கவேண்டும். பாதிப்பு அதிகமாகும்போது 40 முதல் 45வது நாளில் இமாம் மெட்டின் பென்சோயேட் 10 லிட்டருக்கு 4 கிராம் அல்லது மெட்டாரைசியம் அணி சோபிலே, ஒரு ஹெக்டேருக்கு நாலு கிராம் தெளிக்க வேண்டும். 60 முதல் 65 ஆம் நாளில் ப்ளூ பெண்டமைடு, 9 மில்லி/10 லிட்டர் அல்லது குளோ ரோன்டிரி நிபிரோல், 5 மில்லி லிட்டர்/ 10 லிட்டர் என்ற அளவில் ஏதேனும் ஒரு மருந்தினை வெல்லப்பாகு கரைசலுடன் கலந்து ப்ளூ இருக்கும் பகுதிகளில் நன்று நனையும்படி மாலை வேளையில் தெளித்து கட்டுப்படுத்தலாம்’ என தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED பைக் மீது லாரி மோதி பெண் உயிரிழப்பு