×

கோழிப்பண்ணையில் பணிபுரிந்த மேற்கு வங்க தொழிலாளர்கள் பள்ளியில் தங்கவைப்பு

தேனி, நவ. 25: தேனி அருகே தாடிசேரி கோழிப்பண்ணையில் பணிபுரிந்த மேற்கு வங்க மாநில கூலித்தொழிலாளர்களை, கொடுவிலார்பட்டி அரசுப் பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தேனி அருகே, தாடிசேரியில் உள்ள தனியார் கோழிப்பண்ணையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த 22 கூலித்தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். அங்கு போதிய சம்பளம் தரவில்லை என்றும், பெண்களுக்கு பாலியல் தொல்லை தருவதாகவும் குற்றம்சாட்டி நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதை மறுத்த பண்ணை நிர்வாகத்தினர் கூலித்தொழிலாளர்களுக்கு உரிய சம்பளத்தை தந்து சொந்த மாநிலம் செல்ல ஏற்பாடு செய்வதாக கூறினர். இது குறித்து விசாரித்த மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டதையடுத்து நேற்று மேற்கு வங்க மாநில கூலித் தொழிலாளர்கள் 22 பேரையும் தேனி தாலுகா நிர்வாகம், கொடுவிலார்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தங்க வைத்தது. அங்கு கூலித் தொழிலாளர்களுக்கு தேவையான உணவுகளை கோழி பண்ணை நிர்வாகம் அளித்தது.

Tags : West Bengal ,school ,poultry farm stay ,
× RELATED மம்தா குறித்த சர்ச்சை பேச்சு பாஜ தலைவர் திலிப் கோஷ் மீது வழக்குப் பதிவு