×

தேனி ஒன்றிய திமுக இரண்டாக பிரிப்பு

தேனி, நவ. 25: தேனி ஊராட்சி ஒன்றியத்தில் 18 ஊராட்சிகள், 2 பேரூராட்சிகள் உள்ளன. இந்த ஒன்றிய திமுக பொறுப்பாளராக தேனி யூனியன் தலைவர் சக்கரவர்த்தி இருந்து வந்தார். இந்நிலையில், நிர்வாக வசதிக்காக தேனி ஊராட்சி ஒன்றியத்தை தேனி வடக்கு ஒன்றியம், தெற்கு ஒன்றியமாக திமுக தலைமை பிரித்துள்ளது. வடக்கு ஒன்றிய பொறுப்பாளராக தேனி யூனியன் தலைவர் எம்.சக்கரவர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஒன்றியத்தில் குப்பிநாயக்கன்பட்டி, ஜங்கால்பட்டி, கோவிந்தநகரம், வெங்கடாசலபுரம், ரெங்கபுரம், தாடிச்சேரி, தப்புகுண்டு, காட்டுநாயக்கன்பட்டி, பூமலைகுண்டு, தர்மாபுரி ஆகிய 10 ஊராட்சிகளும், பழனிசெட்டிபட்டி பேரூராட்சியும் உள்ளன. தேனி தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளராக முன்னாள் வீரபாண்டி பேரூராட்சி தலைவர் வி.ரத்தினசபாபதி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஒன்றியத்தில் அரண்மனைப்புதூர், கொடுவிலார்பட்டி, நாகலாபுரம், அம்பாசமுத்திரம், உப்பார்பட்டி, கோட்டூர், சீலையம்பட்டி ஆகிய 7 ஊராட்சிகளும், வீரபாண்டி பேரூராட்சியும் உள்ளன. இந்த ஒன்றியத்தில் உள்ள ஊஞ்சாம்பட்டி ஊராட்சி, இனி பெரியகுளம் ஒன்றிய திமுகவுடன் இணைந்து செயல்படும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

Tags : Theni Union DMK ,
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...