×

மீன்வளத்தை பாதுகாக்க புதிய தொழில்நுட்பங்களை கண்டறிய வேண்டும் துணைவேந்தர் பேச்சு

காரைக்குடி, நவ.25: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மீன்வள அறிவியல் துறை, விலங்கு நலன் மற்றும் மேலாண்மை துறை சார்பில் நிலையான மீன் வளத்திற்கான அடுத்த தலைமுறை தொழில்நுட்பம் என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கம் நடந்தது. மீன்வள அறிவியல் துறை தலைவர் கண்ணபிரான் வரவேற்றார். துணைவேந்தர் ராஜேந்திரன் துவக்கி வைத்து பேசுகையில், பருவநிலை மாற்றம் அதிக அளவிலான மீன்பிடிப்பு போன்ற காரணிகளால் மீன்வளம் வெகுவாக பாதிக்கப்படுகிறது. அதனை ஈடுகட்டும் வகையில் அனைத்து மீன்வள ஆராய்ச்சி நிறுவனங்கள், துறை சார்ந்த நிறுவனங்கள் கல்வி நிறுவனங்கள் ஆகியன இணைந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு புதிய தொழில் நுட்பங்களை கண்டறிந்து நிலையான மீன் வளத்தை பாதுகாக்க வேண்டும்.

மகளிருக்கு மீன்வளம் துறை சார்ந்த வேலைவாய்ப்புகளை பெருக்க வேண்டும். இப்பல்கலைக் கழக தொண்டி வளாகத்தில் உள்ள மீன்வள மையத்தை புதிய ஆராய்ச்சிகளுக்கு நன்கு பயன்படுத்த வேண்டும் என்றார். இதில் லக்னோ இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனம் மற்றும்  மீன் மரபணு தேசிய நிறுவன இயக்குநர் குல்தீப் கே லால், கொச்சி கடல்சார் வளங்கள் மற்றும் சூழலியல் மைய அதிகாரி சரவணன், இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவன தேசிய மீன்வள மரபணு மையத்தின் முதன்மை அறிவியலார் அஜித்குமார், அழகப்பா பல்கலைக்கழக விலங்குநலன் மற்றும் மேலாண்மைத்துறை தலைவர் வசீகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முனைவர் பிரபு ஏற்பாடுகளை செய்திருந்தார். பேராசிரியர் கோவிந்தசாமி நன்றி கூறினார்.

Tags : Vice-Chancellor ,
× RELATED புதிய கால்பந்து அணி வேல் எப்சி அறிமுகம்