×

புயல் எச்சரிக்கையால் புயல் காப்பகங்கள், பள்ளிகூடங்கள் ஆய்வு

தொண்டி, நவ.25:  தொண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புயல் காப்பகங்கள், பள்ளிகூடங்கள் மற்றும் தயார் நிலையில் உள்ள இடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நிவர் புயலின் காரணமாக தொண்டி, நம்புதாளை கடல் நீர்மட்டம் சற்று உயர்ந்து காணப்படுகிறது. மேலும் கடல் மிகவும் அமைதியாக அலைகள் இல்லாமல் இருப்பதால் மீனவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. புயலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் நோக்கில் இப்பகுதியில் உள்ள புயல் காப்பகங்கள் மற்றும் அரசு பள்ளி கூடங்கள் உள்ளிட்டவைகளை தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தொண்டி அருகே உள்ள நம்புதாளை பேரிடர் மேலாண்மை புயல் காப்பகத்தை நேற்று துணை ஆட்சியர் அர்ச்சனா பார்வையிட்டார். விஏஓ நம்புராஜேஷ், ஊராட்சி மன்ற தலைவர் பாண்டிச்செல்வி, ஊராட்சி செயலாளர் சாந்தி உள்ளிட்டவர்களிடம் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கையாக எடுத்துள்ளவை குறித்து கேட்டார். மேலும் மின் விளக்குகள், குடிதண்ணீர் உள்ளிட்டவைகள் தயாராக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என கேட்டார்.

Tags : Inspection ,schools ,
× RELATED சிறுத்தை நடமாட்டத்தால் அரியலூர்...