வேலை இல்லாத விரக்தியால் டெய்லர் தூக்கிட்டு தற்கொலை

திருப்பூர், நவ.25: திருப்பூரில் வேலை இல்லாத விரக்தியால் டெய்லர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடலூர் மாவட்டம், தோட்டம்குப்பத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (34). இவர், திருப்பூர் முருகம்பாளையம் பகுதியில் கடந்த 6 ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வந்தார். அதே பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், கடந்த 2 மாதமாக இவருக்கு சரிவர வேலை இல்லை. இதனால், கடுமையான மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த வாரம் தனது மனைவி, மகளை ஊருக்கு அனுப்பிவிட்டு தனிமையில் இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த 22ம் தேதி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அருகில் உள்ளவர்கள் வீரபாண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

More