குளவி கொட்டியதால் 15 தொழிலாளருக்கு சிகிச்சை

பந்தலூர்,நவ.25: பந்தலூர் அருகே எருமாடு பகுதியில் 15 தொழிலாளர்கள் குளவி கொட்டியதால் பாதிக்கப்பட்டனர். பந்தலூர் அருகே எருமாடு வெட்டுவாடி பகுதியில் சேரங்கோடு ஊராட்சி சார்பில் தேசிய ஊரக வேலைவாய்ப்புதிட்டம் மூலம் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று அப்பகுதியில் 20 தொழிலாளர்கள் பணியில் ஈடுப்பட்டனர். அப்போது குளவிகள் கொட்டியதால் தொழிலாளர்கள் பணியை விட்டு அலறியடித்து ஓடினர்.  இதில் பாதிக்கப்பட்ட 15 தொழிலாளர்களை அப்பகுதி மக்கள் மீட்டு கப்பாலா அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.

Related Stories:

>