டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு

பொள்ளாச்சி, நவ.25: பொள்ளாச்சி பகுதியில் மழையால் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க குடியிருப்புகள் தோறும் விழிப்புணர்வு நோட்டீஸ் ஒட்டும் பணியில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்ேபாது பெய்யும் மழையால், பொதுமக்களிடையே டெங்கு காய்ச்சல் பீதி ஏற்பட்டுள்ளது. தற்போது டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க நகர்நல அதிகாரிகள் மூலம குடியிருப்பு மற்றும் வணிகவளாக பகுதிகளில் டெங்கு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நோட்டீசை ஒட்டுவதுடன், கொசுமருத்தும் அடிக்கப்படுகிறது. மேலும் குடிநீர் தொட்டி, கழிவுநீர் ஓடை பகுதிகளில் கொசு உற்பத்தியை தடுக்க, கொசுவை ஒழிக்கும் வகையில் மருந்து தெளிப்பு நடவடிக்கையும் மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து நகராட்சி சுகாதார துறை அலுவலர்கள் கூறுகையில், ‘‘பொள்ளாச்சி பகுதியில் முன்னெச்சரிக்கையாக டெங்கு உள்ளிட்ட ஒரு வகையான வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ஏற்கனவே இந்த மாதிரியான செயல்பாடு தொடர்ந்திருந்தாலும், தற்போது அதனை தீவிரப்படுத்தப்படுகிறது.  நகராட்சிக்குட்பட்ட ஒவ்வொரு வார்டுகளிலும், பல குழுக்களாக சுகாதார பிரிவினர் நேரில் சென்று அப்பகுதியில் தேங்கியிருக்கும் கழிவுநீர் மற்றும் மக்கள் பயன்படுத்தப்படும் தண்ணீர் உள்ளிட்டவைகளில் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கப்படுகிறது. பருவமழை எதிரொலியால் டெங்கு காய்ச்சல் பீதி, கொசுவால் தொற்றுநோய் பரவாமல் தடுக்க தீவிர  நடவடிக்கை எடுக்கப்படுகிறது’ என்றனர்.

Related Stories:

>