146 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி

கோவை, நவ. 25: கோவை மாவட்டத்தில் நேற்று புதிதாக 146 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யபப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் கோவையில் ஊரகம், புறநகர் பகுதிகளை சேர்ந்த 146 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 823 ஆக உயர்ந்துள்ளது. கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 76 வயது மூதாட்டி, இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 74 வயது முதியவர் ஆகியோர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து கோவையில் கொரோனா நோய்த் தொற்றுக்கு பலியனாவர்களின் எண்ணிக்கை 601 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 135 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். கோவையில் இதுவரை 46 ஆயிரத்து 514 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 708 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Related Stories:

>