நொய்யல் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலப் பணிகள்

கோவை,நவ.25: கோவை மாவட்டம் இருகூர் பேரூராட்சி ராவத்தூர் சாலை நொய்யல் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட கலெக்டர் ராஜாமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இருகூர் பேரூராட்சி ராவத்தூர் சாலை நொய்யல் ஆற்றின் குறுக்கே ரூ.3.87 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம்  அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதனைத்தொடர்ந்து நேற்று மாவட்ட கலெக்டர் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது மேம்பாலப் பணிகளை தரமானதாக அமைத்திடவும், பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவரவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இப்பாலம் அமைவதால் இரூகூர், ராவத்தூர், பள்ளபாளையம், சூலூர், கண்ணம்பாளையம், முத்துக்கவுண்டன் புதூர், திருச்சி சாலை மற்றும் அவினாசி சாலை ஆகிய முக்கிய பகுதிகளிலிருந்து உள்ளே வாகனங்கள் வருவதற்கும் வெளியில் செல்வதற்கான பயணம் நேரம் குறைவதுடன் பெருமளவில் போக்குவரத்து நெரிசல் குறையும். இதனால் வாகனஓட்டிகள் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பயனடைவார்கள்.ஆய்வின் போது இரூகூர் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜேந்திரன், உதவி செயற்பொறியாளர் ரகுபதி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Related Stories:

>