×

மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்ட பொதுமக்கள்

மரக்காணம், நவ. 25:விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை மரக்காணம் பேரூராட்சிக்குட்பட்ட அழகன்குப்பம் மீனவர் கிராமத்திற்கு சென்று அப்பகுதி பொதுமக்களை நேரடியாக பார்வையிட்டு அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். அப்போது நிவர் புயலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள மீனவர்கள் பாதுகாப்பான புயல் பாதுகாப்பு மையங்களில் தங்கவேண்டும் என்று கூறி புயல் குறித்து மீனவர்களிடம் விழிப்புணர்வு ஏற்பத்தினார். அங்கிருந்து மற்ற மீனவர் கிராமத்திற்கு செல்ல மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை சென்றார். அப்போது மரக்காணம் அருகே முட்டுக்காடு காலனியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலையில் வந்து மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை வந்த வாகனத்தை வழிமறித்து நின்றனர். இதனை பார்த்த மாவட்ட ஆட்சியர் வாகனத்தில் இருந்து கீழே இறங்கி உங்களுக்கு என்ன பிரச்னை என்று கேட்டார். அப்போது மாவட்ட ஆட்சியரை முற்றுக்கையிட்ட முட்டுக்காடு காலனி பொதுமக்கள் எங்கள் கிராமம் கடற்கரையையொட்டி உள்ளது. இதனால் புயல் தாக்கினால் எங்களுக்கு சேதம் அதிகம் உண்டாகும். ஆனால் இதுவரையில் எங்களை பாதுகாக்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுபோல் ஒவ்வொரு இயற்கை பேரிடரின்போதும் எங்களை அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் அத்திப்பட்டி கிராமம் போல் விட்டு விடுகின்றனர் என்று கூறினர்.உடனே மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை அவர்களது கிராமத்திற்கு சென்று பார்வையிட்டார். மேலும் இப்பகுதி பொதுமக்களை பாதுகாப்பாக தங்கவைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Tags : public ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...