மகிளா காங். நிர்வாகி தற்கொலை முயற்சி புதுச்சேரியில் பரபரப்பு

புதுச்சேரி, நவ. 25:புதுச்சேரி ரெயின்போ நகரை சேர்ந்த சகாயராஜ் மனைவி நிஷா. புதுச்சேரி மாநில மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளரான இவர், சென்னை மற்றும் புதுச்சேரியில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். கடன் தொல்லை காரணமாக இவர் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார். உடனே அவரை புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து அவர் திடீரென மாயமாகிவிட்டார்

இதற்கிடையே தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து நிஷா பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், கடந்த 2017ல் துபாயில் டைல்ஸ் தொழிலில் முதலீடு செய்வதாக ஒரு நபர் கூறியதன்பேரில் திருச்சியை சேர்ந்த ஒரு நபரிடம் ரூ.2 கோடி வரை கொடுத்ததாகவும், ஆனால் அந்த திருச்சி நபர் திடீரென இறந்து விட்டார் எனவும் கூறியுள்ளார்.

புதுச்சேரியை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ஒருவரிடம் ரூ.33 லட்சம் வாங்கி, திருச்சி நபரிடம் கொடுத்ததாகவும், கொடுத்த கடனை திரும்பக்கேட்டு காங்கிரஸ் பிரமுகர் தொல்லை கொடுத்து வருவதாகவும் அவர் வீடியோவில் பேசியுள்ளார்.

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து பெரியகடை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மகிளா காங். பொதுச்செயலாளர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>