எட்டயபுரத்தில் சூதாடிய 4 பேர் கைது

எட்டயபுரம், நவ. 25:  எட்டயபுரம் புலிமால் தெருவில் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையயடுத்து எட்டயபுரம் எஸ்ஐ பொன்ராஜ் தலைமையிலான போலீசார் அங்கு ரோந்து சென்றனர். இதில் அங்குள்ள ஒரு வீட்டில் கோவில்பட்டி வீரவாஞ்சி நகரை சேர்ந்த அர்ச்சுனன் மகன் வேலுமுத்து (45), செண்பகவல்லி நகரை சேர்ந்த நடராஜன் மகன் சின்னத்துரை, விளாத்திகுளம் பொன்னுச்சாமி மகன் சங்கர் (37) வடக்கு திட்டங்குளம் கருப்பசாமி மகன் மாடக்கண்ணு (52) தாப்பாத்தி முத்துப்பாண்டி (40) ஆகிய 5 பேரும் பணம் வைத்து சீட்டு விளையாடியது தெரியவந்தது.  போலீசாரை கண்டதும் முத்துப்பாண்டி மட்டும் தப்பியோடினார். இதையடுத்து 4 பேரை கைதுசெய்த போலீசார் 18 சீட்டுக்கட்டுகள், ரூ.2,170  ஆகியவற்றை கைப்பற்றினர்.

Related Stories: