கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் கட்டுப்பாட்டு அறை முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம் நிவர் புயல் பாதிப்பு புகார் தெரிவிக்க

திருவண்ணாமலை, நவ.25: வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயலால் ஏற்படும் பாதிப்புகளை தெரிவிக்க வசதியாக, கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள நிவர் புயல் இன்று மாமல்லபுரம், காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதையொட்டி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிதீவிர மழைக்கான வாய்ப்பு உள்ளதாக எச்சரித்துள்ளது. மேலும், மணிக்கு 120 கிமீ வேகத்தில் காற்று வீசும் என தெரிவித்துள்ளது. அதையொட்டி, அனைத்துத்துறை அதிகாரிகளுடன் கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு நடத்தினார். பேரிடர் மீட்பு நிவாரண உதவிகளுக்காக 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் மாவட்ட அளவிலான அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறையினர் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் நிவர் புயலால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் தொடர்பு கொள்ள வசதியாக, கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் பேரிடர் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தை தொடர்பு கொள்ள கட்டணமில்லா தொலைபேசி 1077 மற்றும் 04175- 232377, 04175- 233344, 04175- 233345 என்ற எண்களை பயன்படுத்தலாம். மேலும், மேலும், 18 ஒன்றியங்களுக்கும் தனித்தனி தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது. அதன் விபரம்: திருவண்ணாமலை: 04175 - 253074, 250541, துரிஞ்சாபுரம்: 04175- 241266, 241201, கீழ்பென்னாத்தூர்: 04175- 242222, 242988, தண்டராம்பட்டு: 954188 - 246899, செங்கம்: 04188 - 222322, புதுப்பாளையம்: 04188 - 242432, கலசபாக்கம்: 04181 - 241222, 241026, போளூர்: 04181 - 222040, ஜவ்வாதுமலை: 054181 - 245245, 245420, ஆரணி: 04173 - 226353, மேற்கு ஆரணி: 04173 - 226088, செய்யாறு: 04182 - 222258, வெம்பாக்கம்: 04182 - 247221, அனக்காவூர்: 04182 - 222253, பெரணமல்லூர்: 04183 - 245204, சேத்துப்பட்டு: 04181 - 252229, வந்தவாசி: 04183 - 225064, தெள்ளாறு: 04183 - 244024.

Related Stories:

>