மீஞ்சூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச இளம்பெண் கைது

பொன்னேரி: மீஞ்சூரில்  உரிய ஆவணங்களின்றி சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். மீஞ்சூரில், வங்கதேசத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக சிபிசிஐடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, காஞ்சிபுரம் சிபிசிஐடி போலீசார்  மீஞ்சூரில் தங்கியிருந்த இளம் பெண்ணை பிடித்தனர். விசாரணையில்,  அவரது பெயர் பப்பியா கோஷ்  என்பது தெரியவந்தது. மேலும், அவரிடம்   பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை.  சட்டவிரோதமாக தங்கியிருந்த  அந்த பெண்ணை மீஞ்சூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மீஞ்சூர் போலீசார் அவரை கைது செய்து நடத்திய விசாரணையில், வங்கதேசத்தை சேர்ந்த பப்பியா கோஷ் மேற்கு வங்கத்தை சேர்ந்த ஒரு வாலிபரை முகநூலில் பழகி காதலித்து இந்தியா வந்து அந்த வாலிபரை பதிவு திருமணம் செய்து  கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து, சட்ட விரோதமாக இந்தியாவிற்குள் ஊடுருவி ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து மீஞ்சூரில் அவர் ஏன் தங்கினார் என்பது குறித்து வங்கதேச இளம்பெண்ணிடம் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Related Stories:

>