×

செங்கல்பட்டு மாவட்டத்தில் 137 கோடி அரசு நிலத்தில் 44 பேருக்கு பட்டா: 3 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு

காஞ்சிபுரம்: செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் தாலுகா தாழம்பூர் பகுதியில் அரசுக்கு சொந்தமான அனாதீன நிலம் 102 ஏக்கர் இருந்துள்ளது.இதன் மதிப்பு 137 கோடி. செங்கல்பட்டு மாவட்டத்தில், முன்பு பணியாற்றிய நில சீர்திருத்தங்கள் பிரிவு இணை கமிஷனர் ஏ.பாலசுப்பிரமணி, உதவி கமிஷனர் ஏ.பழனியம்மாள், ஆர்டிஓ முத்துவடிவேலு ஆகியோர் சேர்ந்து, இந்த நிலத்தில் 44 பேருக்கு பட்டா வழங்கியுள்ளனர். மேற்கண்ட அதிகாரிகளுக்கு, உபரி நிலங்களை மட்டுமே எடுக்க அதிகாரம் இருந்தது. ஆனால் அவர்கள், கூட்டாக சேர்ந்து 44 பேருக்கு பட்டா வழங்கியதாக, கலெக்டருக்கு புகார் சென்றது. இதையடுத்து, 3 அதிகாரிகள் வழங்கிய நிலத்தை பற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் ஜான்லூயிஸ், தாம்பரம் ஆர்டிஓ ரவிச்சந்திரனுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டக் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் , தீவிரமாக விசாரித்தனர். அதில், அதிகாரிகள் 3 பேர் கூட்டாக சேர்ந்து, அரசு ஆவணங்களை திருத்தி முறைகேடாக பட்டா வழங்கியது தெரியவந்தது. இதையடுத்து 3 பேர் மீது போலீசர் வழக்குப்பதிவு செய்து, தீவிரமாக விசாரிக்கின்றனர். இதில் முதல் குற்றவாளியான நிலச்சீர்திருத்தங்கள் பிரிவு இணை கமிஷனர்  ஏ.பாலசுப்பிரமணி காலமாகி விட்டார். 2வது நபரான ஏ.பழனியம்மாள் திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றுகிறார். மற்றொரு நபர் முத்துவடிவேலு திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் சமூகப் பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : persons ,government land ,district ,Chengalpattu ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...