×

4 தாலுகா அலுவலகங்களில் மக்கள் குறைதீர் கூட்டம் 151 மனுக்கள் பெறப்பட்டன

பெரம்பலூர்,நவ.24: பெரம்பலூர் மாவட்டத்தில் 4 தாலு க்கா அலுவலகங்களில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 151 மனுக்கள்பெறப்பட்டன. பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த ஏதுவாக வழக்கம் போல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்து வந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை 4தாலுகா அலுவலகங்களில் நடத்திட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று பெரம்பலூர் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் (ம)பழங்குடியி னர் நல அலுவலர் கிறிஸ்டி தலைமையில் நடந்தது. இதில் 13 மனுக்கள் பெறப்பட்டது.

வேப்பந்தட்டை தாலுகா அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை தாசில்தார் சக்திவேல் தலைமையில் நடந்த கூட்டத்தில் 9மனுக்களும், ஆலத்தூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் பாலசுப்ரமணியன் தலைமையில் நடந்த கூட்டத்தில் 11மனுக்களும், குன்னம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நலஅலுவலர் ரமணகோபால் தலைமையில் நடந்த கூட்ட த்தில் 17 மனுக்களும்,கலெக்டர் அலுவலகத் தில் மக்கள் குறைத்தீர்க்கும் நாளுக்காக வைக்கப்பட் டுள்ள தனிப்பெட்டியில் 101 மனுக்களும் பெறப்பட்டன. இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 4மொத்தம் 151 மனுக்கள் பெறப்பட்டுள் ளது.பொது மக்களிடமிரு ந்து பெறப்பட்ட மனுக்களி ன்மீது உடனடியாக பரிசீலினைசெய்து விரைந்து தீர்வு காண அந்தந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : grievance meeting ,taluka offices ,
× RELATED மக்கள் குறைதீர் கூட்டம் ஜூன் 8 வரை ரத்து