வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை கூட்டம்

கரூர், நவ. 24: கரூர் மாவட்டத்திற்கான வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சிவசண்முகராஜா தலைமையில் மாவட்ட கலெக்டர் மலர்விழி முன்னிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்தம் 2021 தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் இடமாற்றம் செய்தல் தொடர்பாக தேர்தல் ஆணைய உத்தரவின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் தொடர்பாக நடத்தப்பட்டு வரும் சிறப்பு முகாம்களை முறையாக பயன்படுத்தி 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் தங்களை வாக்காளர் பட்டியலில் இணைத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை அனைத்து தரப்பினர்களும் மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், சார் ஆட்சியர் ஷேக் அப்துல்ரகுமான், கோட்டாட்சியர் பாலசுப்ரமணியன், மாவட்ட வழங்கல் அலுவலர் ஹஸ்ரத்பேகம் உட்பட அனைத்து அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Related Stories:

>