×

கண்மாய்களுக்கு தண்ணீர் திறந்து விடாததை கண்டித்து மறியல் வத்திராயிருப்பு அருகே பரபரப்பு

வத்திராயிருப்பு, நவ. 24: வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக பிளவக்கல் என்ற இடத்தில் பெரியாறு கோவிலாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்தது கடந்த 5ம் தேதி பெரியாறு அணை விவசாயத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த அணைகளுக்கு பாத்தியப்பட்ட 40 கண்மாய்கள் வத்திராயிருப்பு, பெரியகுளம், விராகசமுத்திரம் உள்ளிட்ட 13 மேற்பட்ட கண்மாய்களுக்கு தண்ணீர் சென்று முழுகொள்ளளவை எட்டும் நிலையில் மற்ற கண்மாய்களான சுந்தரபாண்டியம் உள்ளிட்ட  கண்மாய்களுக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் சுந்தரபாண்டியத்தில் உள்ள கண்மாய்களில் தண்ணீர் நிலவரங்களை பார்வையிட்டு நத்தம்பட்டி கண்மாய்க்கு தண்ணீர் திறந்து விட்டனர்.

இதற்கிடையே குன்னூர் ஊராட்சி தலைவர் ஜெகதீஸ்வரி, துணைத்தலைவர் ராஜன், குன்னூர் கண்மாய் பாசன தலைவர் சிவகுருநாதன் உள்ளிட்டோர் சுந்தரபாண்டியத்திலிருந்து குன்னூரில் உள்ள வெண்ணிகொண்டான் செங்குளம், நாகர்குளம் உள்ளிட்ட கண்மாய்களுக்கு தண்ணீர் திறந்து விட்டு நிறைவதற்கு முன்பாகவே நத்தப்பட்டி கிராமத்தில் உள்ள கண்மாய்க்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதை கண்டித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டர்.  தொடர்ந்து அகத்தாப்பட்டி சாலையில் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். பின்னர் குன்னூரில் உள்ள 3 கண்மாய்களும் நிறைந்த பின்னரே நத்தம்பட்டி கண்மாய்க்கு திறந்து விடப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதை அடுத்து கலைந்து சென்றனர்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ