×

அரசு துறையினர் மெத்தனம் உடைந்த மடைகளை அடைத்த விவசாயிகள் 500 குடியிருப்புகள் மூழ்கும் அபாயம்

மானாமதுரை, நவ.24:  மானாமதுரையில் தொடர் மழையால் குளங்கள், கண்மாய்கள் நிறைந்து மடைகள் உடைந்ததால் விவசாயிகளை மடைகளை சிரமப்பட்டு அடைத்தனர். அரசு துறையினர் நெல்வயல்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மானாமதுரை நகரை சுற்றி பட்டத்தரசி, நவத்தாவு, குமிழன்தாவு, கே.கே.பள்ளம், சிப்காட் பெரியகண்மாய், கல்குறிச்சி கண்மாய், ஆலங்குளம் கண்மாய், தீத்தான்குளம் கண்மாய் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன. இந்த கண்மாய்களில் பெரும்பாலானவை பொதுப்பணித் துறை பராமரிப்பிலும், சில கண்மாய்கள் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டிலும் உள்ளன.

கடந்த ஒரு வாரமாக மானாமதுரை வட்டாரத்தில் நல்ல மழை பெய்து கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரித்து கண்மாய்கள் நிரம்பியுள்ளது. இவற்றில் நவத்தாவு, பட்டத்தரசி, சிப்காட் பெரிய கண்மாய்கரைகளை தொடுமளவுக்கு நீர் நிரம்பி மாறுகால் பாய்கிறது. பட்டத்தரசி கண்மாய் நிறைந்து அண்ணாமலை நகர், சாஸ்தா நகர் குடியிருப்புகளை சுற்றிலும் தண்ணீர் தேங்கியது. இந்நிலையில் மேலும் இன்று முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ள நிலையில் கண்மாய்களில் உள்ள மடைகள் உடைந்து போனதை விவசாயிகளே சிரமப்பட்டு அடைத்தனர். இந்நிலையில் இன்று முதல் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் குடியிருப்புகளுக்குள் நீர் சூழ்ந்து பெரியளவில் பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் நிலை உள்ளது.

நவத்தாவு கிராமத்தை சேர்ந்த ஜெகதீஸ் கூறுகையில், ‘‘மானாமதுரை புறநகர் பகுதியான நவத்தாவு, அலங்காரக்குளம், ஆனந்தவல்லி சோமநாதர் குளங்களும் நிரம்பியுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நவத்தாவு கண்மாய் மடைகள் உடைந்து விவசாயிகள் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் சிரமப்பட்டு மடைகளை அடைத்தனர். ஆனால் எந்த அதிகாரிகளும் வரவில்லை. இன்று முதல் கனமழை தொடர்ந்தால் பட்டத்தரசி ராம்நகர் சாஸ்தா நகர், அண்ணாமலை நகரில் 500 குடியிருப்புகளில் தண்ணீர் புகும். எனவே கண்மாய் நீரினை விவசாயத்திற்கு பயன்படுத்தும் வகையில் வருவாய்த்துறை உள்ளிட்ட அரசுத்துறையினர் கரைகளை பலப்படுத்தவும், உடைப்பு ஏற்படாமல் தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

Tags : government department ,
× RELATED கலைத்துறையில் சாதனை படைத்த கலைஞர்களுக்கு விருதுகள்: கலெக்டர் வழங்கினார்