×

திண்டுக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மலைவாழ் மக்கள் காத்திருப்பு போராட்டம்

திண்டுக்கல், நவ. 24: திண்டுக்கல் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் காத்திருக்கும் போராட்டம் நடந்தது. முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி தலைமை வகித்தார். போராட்டத்தில் பழங்குடி மக்களுக்கு சாதி சான்றிதழ் உடனடியாக வழங்க வேண்டும். இலவச வீட்டு மனை பட்டா, கேரள அரசாங்கத்தை போல ரூ.6 லட்சம் செலவில் வீடு கட்டித்தர வேண்டும். என்.புதுப்பட்டியில் உண்டு உறைவிடப்பள்ளி கட்டித்தர வேண்டும். ரேஷன் கடை அமைக்க வேண்டும். கொடைக்கானல் வட்டம் கே.சி.பட்டி கூட்டப்பாறை ஆதிவாசி மக்கள் மயான பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.

வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பெருமாள், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட செயலாளர் செல்லையா, மாநில குழு உறுப்பினர் காளியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதையடுத்து 54 சாதி சான்றிதழ்கள் வரும் டிச.5ம் தேதி வழங்குவதாக கோட்டாட்சியர் உத்தரவாதம் அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Tags : Hill ,Dindigul Kottachiyar ,office ,
× RELATED சித்ரா பவுர்ணமியையொட்டி வெள்ளியங்கிரி மலையில் குவியும் பக்தர்கள்..!!