கொடைக்கானல் அரசு பள்ளி மாணவர் பல் மருத்துவத்தில் சேர்ந்தார்

கொடைக்கானல், நவ. 24: கொடைக்கானலை சேர்ந்தவர் ஏனோக் எபினேசர். இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2018ம் ஆண்டு படித்து முடித்தார். அதன்பின் ஒரு ஆண்டாக கோவையில் உள்ள தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் படித்து வந்த இவர் இந்த ஆண்டு எழுதிய நீட் தேர்வில் வெற்றி பெற்றார். தொடர்ந்து மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்ற எபினேசருக்கு பிடிஎஸ் ( பல் மருத்துவம்) துறை கிடைத்துள்ளது. தொடர்ந்து அவர் தான் பயின்ற பள்ளிக்கு வந்து ஆசிரியர்கள் மற்றும் தான் வசிக்கும் பகுதி மக்களை சந்தித்து இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களை பெற்று கொண்டார். பின்னர் எபினேசர் நிருபர்களிடம் கூறியதாவது: மருத்துவ துறையில் 7.5 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு செய்த தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வை பயப்படாமல் எதிர்கொள்ள வேண்டும். அப்படி எதிர்கொண்டால் அத்தேர்வு மிக எளிதாக இருக்கும்’ என்றார்.

Related Stories:

>