தி.மு.க., சார்பில் முரசொலி மாறன் நினைவு நாள் அஞ்சலி

ஈரோடு,  நவ. 24: தி.மு.க., முன்னணி தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய  அமைச்சருமான முரசொலி மாறனின் 17ம் ஆண்டு நினைவு நாளையொட்டி ஈரோடு தெற்கு  மாவட்ட தி.மு.க. சார்பில் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நேற்று அஞ்சலி  செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி தலைமையில்,  மாநில நிர்வாகிகள் சச்சிதானந்தம், சந்திரகுமார், ஈரோடு இறைவன், குறிஞ்சி  சிவக்குமார், மாவட்ட நிர்வாகிகள் குமார்முருகேஷ், செந்தில்குமார்,  சின்னையன், பழனிசாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பிரகாஷ், முன்னாள்  கவுன்சிலர்கள் ராமச்சந்திரன், நடராஜன், திண்டல்குமாரசாமி, மகளிர் தொண்டரணி  நிர்வாகி திலகா, வில்லரசம்பட்டி முருகேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து  கொண்டு முரசொலி மாறனின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி  செலுத்தினர்.

இதே போல ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி  சார்பில் பவானி ஒன்றியம், குருப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள கட்சி  அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.  அலங்கரிக்கப்பட்ட முரசொலி மாறனின்  திருவுருவ படத்திற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பவானி சேகர் தலைமையில்  ஏராளமான தி.மு.க.வினர் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில்  மாவட்ட பிரதிநிதி வேலுச்சாமி, மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் சரசாள்,  ஒன்றிய பிரதிநிதி விஸ்வநாதன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ஆனந்த்,  இலக்கிய அணி சித்தேஸ்வரன், சத்யா ஆனந்த் மற்றும் மகளிரணி, தொண்டரணி  நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பவானி:  பவானி நகர தி.மு.க., சார்பில் முரசொலி மாறனின் நினைவு தினத்தை முன்னிட்டு நகரச் செயலாளர் ப.சீ.நாகராஜன் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நகர அவை தலைவர் மாணிக்கராஜன், இளைஞரணி அமைப்பாளர் இந்திரஜித், நிர்வாகிகள் ஜெயராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க., நெசவாளர் அணி சார்பில், மாவட்ட அமைப்பாளர் கே.சரவணன் தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

Related Stories:

>