×

கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கான வெளிப்புற சிகிச்சை பிரிவு துவக்கம்

புதுச்சேரி, நவ. 24: புதுச்சேரி ஜிப்மரில் கொரோனா தொற்றிலிருந்து மீண்ட நோயாளிகளுக்கான வெளிப்புற சிகிச்சை பிரிவு டிச.1ம் தேதி முதல் துவங்கப்படுகிறது.  இது தொடர்பாக புதுச்சேரி ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் நுரையீரல் மருத்துவ துறைகள் இணைந்து கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து மீண்ட நோயாளிகளுக்கான வெளிப்புற சிகிச்சை பிரிவு சேவையை டிசம்பர் 1ம் தேதி முதல் தொடங்குகின்றன. கோவிட் நோய் தொற்றிலிருந்து மீண்ட பிறகு உடல் வலி, நெஞ்சு வலி அல்லது மூச்சு திணறல் போன்ற மருத்துவ பிரச்னைகள் உள்ள நோயாளிகள் மருத்துவ தொலைதொடர்பு மூலம் மருத்துவரின் சந்திப்பை 63844 04071 என்ற தொலைபேசியில் செவ்வாய் மற்றும் புதன் காலை 9 மணி முதல் மதியம் 4.30 மணி வரை தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம்.

 முன்பதிவு செய்த பிறகு நோயாளிக்கு தொலைபேசி அழைப்பு அல்லது குறுஞ்செய்தி அனுப்பப்படும். மருத்துவ உதவி தேவைப்படும் நோயாளிகள் ஜிப்மர் போஸ்ட் கோவிட் கிளினிக் வருகை தருமாறு கேட்டுக் கெள்ளப்படுவர்.
 இந்த சிகிச்சை பிரிவு பழைய ஓபிடி கட்டிடத்தில் செவ்வாய் மதியம் 2 மணி முதல் 4 மணி வரை பொது மருத்துவத்துறையிலும் (அறை எண்-75) மற்றும் புதன் மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நுரையீரல் மருத்துவத் துறையிலும் (அறை எண்-82) செயல்படும். நோயாளிகள் மருத்துவமனைக்கு வர அறிவுறுத்தப்பட்டால் கோவிட்-19 உறுதி செய்யப்பட்ட நகல், குறுஞ்செய்தி, சிகிச்சை குறிப்புகளை தங்களுடன் கொண்டுவர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : corona survivors ,
× RELATED 2.43 கோடி பேர் பாதிப்பு; 8.29 பேர் பலி:...