கரிவலம்வந்தநல்லூர் கோயிலில் திருக்கல்யாண விழா

நெல்லை, நவ.24: கரிவலம்வந்தநல்லூர் ஒப்பனையம்பாள் சமேத பால்வண்ணநாத சுவாமி கோயிலில் அமைந்துள்ள வள்ளி, தேவசேனா சமேத வீரசண்முக பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. திருக்கருவை வர்த்தகர்கள் தர்மபரிபாலன சங்கம் தொடர்ந்து 80 ஆண்டுகளாக இவ்விழாவை நடத்தி வருகிறது. காலையில் சுவாமி, அம்பாள், வீரசண்முகர், வள்ளி தேவசேனா ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து வள்ளி தேவசேனா சமேத ஆறுமுகநயினார் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது.

Related Stories: