போளூர் அருகே வீட்டு சுவர் இடிந்து விழுந்து முதியவர் பலி

போளூர், நவ.24: போளூர் தாலுகா அரும்பலுர் கிராமத்தை சேர்ந்தவர் காளி(65). இவர் கடந்த 21ம் தேதி காலை பக்கத்து வீட்டை சேர்ந்த வேலுவின் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அந்த வீடு ஏற்கனவே தொடர் மழை காரணமாக சேதமடைந்த நிலையில் இருந்ததால் அந்த சமயத்தில் வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது. இதில் முதியவர் காளி சிக்கி படுகாயமடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கொம்மனந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.  பின்னர் அங்கிருந்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து அவரது மகன் மணிகண்டன் போளூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

Related Stories:

>