(தி.மலை) பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் கைது

செய்யாறு, நவ.23: செய்யாறு தாலுகா மகாஜனம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார் மகன் பாலாஜி(25), டிராக்டர் டிரைவர். திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவியை காதலித்து வந்த பாலாஜி, கடந்த மாதம் 14ம் தேதி மாணவியை கடத்தி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவியின் தந்ைத தூசி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், பாலாஜியும், கடத்தப்பட்ட மாணவியும் கிருஷ்ணகிரியில் இருப்பது குறித்து போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் ஷாகின் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மாணவியை மீட்டனர். பின்னர், மாணவியை கடத்திய பாலாஜியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>