போலீஸ் சிறப்பு முகாம் மாவட்டத்தில் மாயமான 32 பேர் கண்டுபிடிப்பு

நாமக்கல், நவ.23: நாமக்கல் மாவட்டத்தில் காணாமல் போன நபர்களை கண்டறிவதற்கான சிறப்பு முகாம் காவல்துறை சார்பில், நேற்று திருச்செங்கோடு விவேகானந்தா கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட எஸ்பி சக்தி கணேசன் தொடங்கி வைத்து பேசினார். சிறப்பு முகாமில், நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து காணாமல் போனவர்களை கண்டுபிடித்து தரக்கோரி, அவர்களின் உறவினர்கள் 207 பேர் கலந்து கொண்டனர். நாமக்கல், கரூர், திருச்சி, சேலம், ஈரோடு போன்ற மாவட்டங்களில் இருந்தும், அடையாளம் காணப்படாமல் உள்ள இறந்து போன 3,278 நபர்களின் புகைப்படங்கள், அவர்களின் அங்க அடையாளங்கள், அவர்கள் அணிந்திருந்த உடைகள் மற்றும் ஆபரணங்கள் குறித்து, காணொலி மூலமாக உறவினர்களுக்கு காட்டப்பட்டது.

இதில், காணாமல் போன 32 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர். ஒரு அடையாளம் தெரியாத பிரேதமும் கண்டுபிடிக்கப்பட்டு உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காணாமல் போனவர்களில் 32 பேர் வேறு ஊர்களில் தற்போது உயிருடன் இருப்பதாகவும், அவர்களை பற்றிய உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். தொடர் விசாரணைக்கு பின்னர் அவர்கள் அழைத்து வரப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்க பட உள்ளதாக, மாவட்ட எஸ்பி சக்தி கணேசன் தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு இடு பொருட்கள்: புதுச்சத்திரம் வட்டாரத்தில், மானாவரி நிலத்தில் ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம் சார்பில், பயிர் மற்றும் தீவனப்பயிர் சாகுபடி, கால்நடை, தேனீ, நாட்டுக்கோழி மற்றமு்  பழக்கன்று வளர்த்தல், மண்புழு உரம் தயாரிக்கும் விவசாயிகளுக்கு, வேளாண்மை உதவி இயக்குனர் பேபிகலா இடு பொருட்களை வழங்கினார் இதில் வேளாண் அலுவலர் தாரண்யா, உதவி வேளாண் அலுவலர் ஜீவிதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

குவி ஆடி உடைப்பு: சேந்தமங்கலத்தில் இருந்து வேலுகுறிச்சி வழியாக, ராசிபுரத்திற்கு மாநில நெடுஞ்சாலை உள்ளது. பேளுக்குறிச்சி கணவாய் மேடு மலைப்பகுதி மற்றும் சிங்களாந்தபுரம் சிறிய மலைக்குன்றில் 2  அபாயகரமான வளைவுகள் உள்ளது. இங்கு விபத்துக்களை தவிர்க்க நெடுஞ்சாலைத்துறை வளைவுகளில் பொருத்தியிருந்த குவி ஆடி உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளது. இதனால் விபத்துக்கள் அதிகரித்துள்ளது. புதிதாக குவிஆடி பொருத்த வாகன ஓட்டகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>