ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு அபிஷேகம்

நாமக்கல், நவ.23: நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் நேற்று, கார்த்திகை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி, ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு 1,008 வடைமாலை சாத்தப்பட்டது. தொடர்ந்து பால் அபிஷேகம், எண்ணெய், பஞ்சாமிர்தம், மஞ்சள், சீயக்காய் உள்ளிட்ட நறுமண பொருட்களால், ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில், ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கை கோயிலில் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி சுவாமியை தரிசனம் செய்தனர்.

Related Stories:

>