பாலக்கோடு அருகே சிறுமியை கடத்திய பட்டதாரி ஆசிரியர் போக்சோவில் கைது

பாலக்கோடு, நவ.23:தர்மபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் அருகே போரநாயக்கனூர் பகுதியை சேர்ந்த 17வயது சிறுமி அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்2 படித்து விட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 26ம் தேதி, மாரண்டஅள்ளியில் உள்ள கடைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதையடுத்து அவரது தாய், பாலக்கோடு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார்.  அதில், பாப்பாரப்பட்டி அருகே பாலவாடியை சேர்ந்த கருப்புசாமி மகன் சேகர்(30). தனியார் பள்ளி பட்டதாரி ஆசிரியர், தனது மகளை கடத்தி சென்றதாக கூறி இருந்தார். இதையடுத்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில் வெள்ளிசந்தை பகுதியில் நின்றிருந்த சேகரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், சிறுமியை கடத்தி திருமணம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து சிறுமியை மீட்டு, சேகரை கைது செய்து, தர்மபுரி சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>