×

திருச்சி வந்த ராஜஸ்தான் கம்பளி அரசு நிகழ்ச்சியில் பாஜகவுடனான கூட்டணி அறிவிப்பு மரபு மீறிய செயல்

திருச்சி, நவ.23: அரசு நிகழ்ச்சியில் பாஜகவுடனான கூட்டணி அறிவிப்பு மரபுகளை மீறிய செயலாகும் என மமக மாநில தலைவர் ஜவாஹிருல்லாஹ் கூறினார். மனித நேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லாஹ் கட்சியை பலப்படுத்தும் விதமாக திருச்சி பாலக்கரையில் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி தொடரும் என அரசு நிகழ்ச்சியில் அறிவித்து இருக்கிறார்கள். அதை அமித்ஷா ஆமோதித்து பேசியிருக்கிறார். அரசு நிகழ்ச்சியில் இவ்வாறு பேசி இருப்பது மரபுகளை மீறிய செயல். பாஜக வாரிசு அரசியலை முறியடித்து வருவதாக அமித்ஷா தெரிவித்துள்ளார்.

அந்தப் பேச்சு நகைச்சுவையாகவே உள்ளது. காரணம் இவருடைய அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா பிசிசிஐ கிரிக்கெட் வாரியத்தின் முக்கிய பதவியில் இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
மத்தியில் பாஜக இருப்பதால் தமிழகத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்துவதாக அமித்ஷா தெரிவித்துள்ளார். மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் தமிழகத்தின் வளர்ச்சி மட்டுமல்ல, தமிழக மக்களின் உரிமைகள் பறிபோய் உள்ளது. நீட் தேர்வு, புதிய கல்வி கொள்கை போன்றவை மூலம் தமிழக மாணவர்களின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்களுக்கு வர வேண்டிய திட்டங்கள் எல்லாம் குறைந்து போய் உள்ளது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரின் ஊழலை விசாரிக்க கூடிய அளவிற்கு ஒரு குழு அமைக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி படுதோல்வி அடைந்தது போல சட்டமன்ற தேர்தலிலும் படுதோல்வி அடையும். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி தமிழகத்தில் மலரும். தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்படுவது ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிப்பது போன்றது. சென்னையில் அமித்ஷா வந்தபோது கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. சென்னையில் நடைபெற்றது அரசு விழா இல்லை. அதிமுக பாஜகவின் தேர்தல் பரப்புரை கூட்டம்தான். தமிழகத்திற்கு ஒரு தனி அரசியல் கலாச்சாரம் உண்டு. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழக மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு அதிகம். அமித்ஷாவின் மாயாஜால வித்தைகள் பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட இந்தியாவின் பிற மாநிலங்களில் பலித்தது போல தமிழகத்தில் பலிக்காது. பாஜக, அதிமுக தமிழகத்திற்கு ஏற்படுத்தியுள்ள இழப்பை மக்கள் நன்கு அறிவார்கள்.
இவ்வாறு ஜவாஹிருல்லாஹ் கூறினார்.

Tags : announcement ,BJP ,Rajasthan ,Trichy ,wool government event ,
× RELATED பாஜக அரசின் கையாலாகாத தன்மை : ப.சிதம்பரம் தாக்கு